30 ஆண்டில் முதல் முறை: விளையாடும் தகுதியை இழந்த அமெரிக்கா!

கால்பந்து உலகக்கோப்பை தகுதிசுற்றுப் போட்டியில், டிரினிடாட் – டோபாகோ அணியுடன்அமெரிக்கா தோல்வியை சந்தித்ததாலும்,கோஸ்டா ரிகாவுடன் நடந்த போட்டியில் பனாமா போட்ட சர்ச்சைக்குரிய கோல் ஒன்றினாலும், 1986 ஆம் ஆண்டில் இருந்து முதல்முறையாக உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் விளையாடும் வாய்ப்பைஅமெரிக்கா இழந்துள்ளது. டிரினிடாட்டில் நடந்த போட்டியில் அமெரிக்க அணி நேற்றிரவு ஆடத் தொடங்கியபோது, தமது பிரிவில் மூன்றாவது இடத்திலிருந்தது. அப்போட்டியில் அமெரிக்கா 2 – 1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் பனாமாவில் நடந்த ஒரு தகுதிச் சுற்றுப் போட்டியில் கோஸ்டா ரிகா-பனாமா அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியில், ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஒரு கோல் … Continue reading 30 ஆண்டில் முதல் முறை: விளையாடும் தகுதியை இழந்த அமெரிக்கா!